மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Update: 2023-03-25 04:56 GMT
  • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியின் கூடுதல் தவணையை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்கிறது. 2023 ஜனவரி 01 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
  • அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு கட்டும் விதமாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரத்து 825 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதனால் 47 லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு பணியாளர்களும் 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்