சபரிமலையில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா

Update: 2022-08-29 02:59 GMT

சபரிமலையில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா


சபரிமலையில் தாலாட்டு பாடலாக பாடப்படும் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. தியானத்தின் கடைசி படியான இறைவனை உறங்க செய்ய நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டது. இந்த நிலையில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா, இன்று பந்தளத்தில் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினமும் இரவு 10.55 மணியளவில் அத்தாழ பூஜை முடிந்து கோவில் மூடும் முன் ஹரிவரசம் பாடப்படும் என்றும், ஒவ்வொரு விளக்கும் விதிவிலக்கு இல்லாமல் அணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்