கார் வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2022-09-06 08:21 GMT

தஞ்சாவூரில் கொள்ளையர்கள், நூதன முறையில் கார் கவர்களை மட்டும் குறிவைத்து திருடி வருகின்றனர். தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் கவர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் நெய்தல் நகர் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் காரின் கவர்களைளை திருடிச் சென்றுள்ளனர். திருடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்