திடீரென வெடித்த கார் டயர்... நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார் - சென்னையில் பயங்கரம்

Update: 2023-05-23 10:32 GMT

சென்னை ஆவடி அருகே நடுரோட்டில் கார், தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். பெரம்பூரில் இருந்து திருவள்ளூருக்கு, சத்தியமூர்த்தி என்பவர் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆவடி அருகே வெள்ளச்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சத்தியமூர்த்தி பலத்த காயம் அடைந்த நிலையில், விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்