முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா'... 200 ஆடுகள், 300 சேவல்கள் முனியாண்டிக்கு பலி - மணக்க மணக்க பக்தர்களுக்கு அன்னதானம்

Update: 2023-01-28 10:03 GMT

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோவிலில், 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, 200 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சேவல்கள் சாமிக்கு பலியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆயிரத்து 500 கிலோ பிரியாணி அரிசியில், அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்யப்பட்டது. பிறகு மணக்க மணக்க தயாரான பிரியாணி, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்