பறவைகளை வேட்டையாடும் ஜோடி..40 பச்சைக்கிளிகள்,70 முனியாஸ் பறவைகள் பறிமுதல்

Update: 2023-06-16 16:59 GMT

பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் அரிய வகை பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இந்நிலையில், பழனி ஆவணி மூல வீதியை சேர்ந்த கணவன், மனைவியான மாரிமுத்து-பார்வதியிடம் இருந்து, கூண்டில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 40 பச்சைக்கிளி, 70 முனியாஸ் பறவைகளை வனத்துறையினர் மீட்டனர். பறவைகளை பிடிக்க பயன்படுத்திய கூண்டுகளை பறிமுதல் செய்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

வீட்டில் கிளிகளை வளர்த்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் வீட்டில் வைத்துள்ள கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்