ஆஸ்திரேலியாவில் பெண்ணை கொன்றுவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்த இந்தியர் | Australia
ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிவந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தின் வாங்கெட்டி கடற்கரையில் தோயா கார்டிங்கே என்ற 24 வயது பெண்ணை, இந்தியாவை சேர்ந்தை ராஜ்விந்தர் சிங் என்பவர் கொலை செய்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் தப்பியோடிய நிலையில், அவர் பற்றி துப்பு கொடுத்தால் 5 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்டர்போல் மற்றும் சிபிஐ உதவியுடன், டெல்லியில் பதுங்கியிருந்த ராஜ்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.