"என் Wife பேர எப்படி போடாம இருக்கலாம்".. அடித்து உடைத்த அதிமுக கவுன்சிலரின் கணவர்

Update: 2023-03-17 04:06 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி சமையலறை கட்டடத்தின் கல்வெட்டில், அதிமுக கவுன்சிலரின் பெயர் இல்லாத‌தால், அவரது கணவர் கல்வெட்டை உடைத்துள்ளார்.
  • இளையான்குடி அருகே விஜயன்குடியில் தொடக்கப் பள்ளிக்காக புதிய சமையலறை கட்டப்பட்டு, மானாமதுரை எம்எல்ஏ திறந்து வைக்க வந்தார்.
  • அப்போது, கல்வெட்டு உடைந்து கிடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போது, அதிமுக மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் பெயரை கல்வெட்டில் பதிக்கவில்லை எனக்கூறி அவரது கணவர் செல்வராஜ் உடைத்த‌து தெரிய வந்த‌து.
  • இது தொடர்பாக விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்