சங்கரன் கோவில் விபத்தில் புதிய திருப்பம்...லீவில் வகுப்புகள் நடத்தப்பட்டதா? - துருவி துருவி விசாரணை
கழுகுமலை அருகே, திருநெல்வேலி - சங்கரன்கோவில் சாலையில், தனியார் பள்ளி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கார் ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பெண் ஒருவர், ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடக்கிறதா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்புவா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், போலீசாரின் பலத்த பாதுக்காப்புடன் சொந்த கிராமத்துக்கு உடல்கள் கொண்டுச் செல்லப்பட்டன.