அரியவகை முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி - வில்லிவாக்கம் திமுக சார்பில் ரூ.50,000 நிதி உதவி
முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. ஆவடி வீராபுரத்தை சேர்ந்த 9 வயதான டான்யா, அரியவகை முக சிதைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இது குறித்து தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்ததை அடுத்து அவருக்கு தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முன்வந்தது. இதைதொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நேரில் வழங்கப்பட்டுள்ளது.