25 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு..தீயணைப்புத்துறையினர் மாஸ்டர் பிளானால் மீட்பு - நெஞ்சை பதற வைக்கும் காட்சி

Update: 2023-04-22 14:10 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை செட்டி தெருவை சேர்ந்த குமார் என்பவரது பசுமாடு 25 அடி ஆழ உறை கிணற்றில் விழுந்த‌து. கிணறு மிகவும் குறுகியதாக இருந்ததால், பசுவை மீட்பதில் கடும் சிர‌ம‌ம் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து கிணற்றில் நிரப்பினர். தண்ணீரில் மிதக்கும் பந்து மேலே வருவது போன்று, பசு நீந்திக்கொண்டே மேலே வந்த‌தும், கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தீயணைப்புத்துறையினரை பசுவின் உரிமையாளரும், அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்து பாராட்டினர். பசுவை மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்