Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-11-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-11-2022) | Morning Headlines | Thanthi TV;

Update: 2022-11-20 00:59 GMT

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை...எச்சரிக்கையை திரும்ப பெற்றது, இந்திய வானிலை ஆய்வு மையம்...வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கானஅறிவுரைகள் வாபஸ்....

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளும்போது குண்டு வெடிப்பு நிகழும் என மிரட்டல் கடிதம்...இரண்டு பேர் கைது... மேலும் 3 பேருக்கு போலீஸார் வலை...

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு....இருவர் காயம்.... குண்டுவெடிப்பு என வதந்தி பரவியதால் போலீசார் குவிப்பு...

மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்ததன் எதிரொலி...சென்னையில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை...

ஒன்றுமே இல்லாத, அதே நேரத்தில் இருப்பது போல் காட்டுகின்ற பாஜக எனும் பிசாசுவை உடுக்கை அடித்து விரட்டுவோம்...திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆவேசம்...

அதிமுக பொதுக்குழு தொடர்பாக பி.வைரமுத்து, ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுத்தாக்கல்...மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி ஈபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு...

மயிலாடுதுறையை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்...இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை...

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகைக்கு வாரிசு திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல்....தமிழகத்தில் பிற மொழி படங்கள் வெளிவர முடியாத நிலை ஏற்படும் என தமிழ் திரைப்பட துறையினர் எச்சரிக்கை...

Tags:    

மேலும் செய்திகள்