துணைவேந்தர்கள் கூட்டம் - ஆளுநர் மாளிகை அறிவிப்பு/வரும் 25, 26 தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் - ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு/உதகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 25 ம் தேதி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைப்பார் என அறிவிப்பு/தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு/ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆளுநரை வேந்தர் என குறிப்பிட்டு அழைப்பு/இரு நாள் மாநாட்டில் ஏ.ஐ.பயன்பாடு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம்/முதல்வர் வேந்தராக செயல்படுவார் என மசோதா திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆளுநர் மாளிகை அறிவிப்பு/கோப்புக்காட்சி