மக்கள் யார் பக்கம் 23.07.2018 : களத்தில் முந்துவது ரஜினியா...? கமலா...?

மக்கள் யார் பக்கம் 23.07.2018 : களத்தில் முந்துவது ரஜினியா...? கமலா...?

Update: 2018-07-23 17:34 GMT
மக்கள் யார் பக்கம் 23.07.2018 : களத்தில் முந்துவது ரஜினியா...? கமலா...?

படங்களில் மட்டுமல்ல, அரசியலிலும் ரஜினி, கமல் இடையே போட்டா, போட்டி தான். வருகிறேன் என ரஜினி சொல்வதற்கு முன் வந்துவிட்டேன் என்றார், கமல்.


ஆன்மீக அரசியல் என ரஜினி சொல்ல, இந்த பக்கமும் அல்ல, அந்த பக்கமும் அல்ல மய்யமாக இருப்பேன் என கட்சியை தொடங்கினார், கமல். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு முழு நேர அரசியல் வாதியாக வலம் வருகிறார், கமல்.


சுற்றுப்பயணம் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்க களமிறங்கிய கமல், தேசிய தலைவர்கள் உடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை. குமாரசாமி தொடங்கி ராகுல் காந்தி வரை தேசிய தலைவர்கள் உடனான கமலின் சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


கமல் ஒரு பக்கம் இப்படி இயங்க, போயஸ் கார்டனில் இருந்தபடியே சத்தமில்லாமல் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார், ரஜினிகாந்த். மன்ற பணிகளை முடுக்கிவிட்டு அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டுகிறார். திரையில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் இருவரும் தங்களுக்கென தனி பாணியை பின்பற்றுகிறார்கள். 


ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி 8 வழிச்சாலை வரை மனதில் சரியென பட்டதை, பட்டென சொல்லி அதிர வைக்கிறார்,  ரஜினிகாந்த். 


சமூக விரோதிகள் என ரஜினி குற்றம்சாட்ட, அதற்கு கமல் மறுப்பு தெரிவிக்க, அரசியலிலும் இருவரும், இரு வேறு திசையில் பயணிப்பது  உறுதியாகிவிட்டது. தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பலரும்  சினிமா துறையிலிருந்து வந்ததாலோ என்னவோ, ரஜினி, கமலின் ஒவ்வொரு செயலும் முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த சூழலில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தல், அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உருவானதாக கருதப்படும் சூழலில் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல், என்பதால் இது கூடுதல் கவனம் பெறுகிறது. 


வெற்றிடத்தை இவர்கள் நிரப்புவார்களா? மக்களின் மனநிலை என்ன? 
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை