எல்லையில் சீண்டும் சீனா.. இந்தியாவுக்கு பெரும் சவால்.. பலம் கூட்டிய அமெரிக்கா
சீனாவால் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால், பிராந்திய பாதுகாப்பு உட்பட பல விவகாரங்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் விவாதித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சுதந்திரமான இந்தோ - பசிபிக்கை ஊக்குவிப்பது, உலகளாவிய, பிராந்திய பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை, தொழிற்துறை, விண்வெளி ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அசாமில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்கள் பயன்படுத்திய பாராசூட்கள், சீருடை போன்றவற்றை லாயிட் ஆஸ்டினிடம், ராஜ்நாத்சிங் ஒப்படைத்தார்.