தமிழக முதல்வரின் கோரிக்கை ..."இலங்கை அரசு நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும்" - இலங்கை எம்.பி மனோ கணேசன் ட்வீட்

மீனவர்கள் பிரச்சினை தொடர்பான தமிழக அரசின் இடைவிடாத கோரிக்கையை இலங்கை அரசு நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும்...;

Update: 2022-04-16 11:42 GMT
தமிழக முதல்வரின் கோரிக்கை ..."இலங்கை அரசு நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும்" - இலங்கை எம்.பி மனோ கணேசன் ட்வீட்

மீனவர்கள் பிரச்சினை தொடர்பான தமிழக அரசின் இடைவிடாத கோரிக்கையை இலங்கை அரசு நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விடுதலை, ரோந்து நடவடிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் இலங்கை அரசை இடைவிடாது வலியுறுத்தி வருகிறார். இவற்றை இலங்கை அரசும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து தற்போதைய நெருக்கடி நிலையை மனதில் கொண்டு, நல்லெண்ணத்துடன் அணுக வேண்டும் என்று எம்.பி மனோ கணேசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்