ருமேனியாவில் கொரோனா 4-வது அலை - குறைவான தடுப்பூசி செலுத்தியதால் பாதிப்பு

ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன.;

Update: 2021-11-05 08:32 GMT
ருமேனியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா தொற்றின் நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இருந்தபோதும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ருமேனியாவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்