மகாத்மா காந்தி நினைவு நாணயம் - பிரிட்டன் அரசு வெளியீடு

தீபாவளியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.;

Update: 2021-11-05 04:07 GMT
தீபாவளியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் கொள்கையை போற்றும் வகையில் 5-பவுண்டு மதிப்பிலான இந்த நாணயத்தை பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் வெளியிட்டார். தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட இந்த நாணயத்தில் இந்தியாவின் தேசிய மலர் தாமரையின் வடிவம் மற்றும் மகாத்மா காந்தியின் 'என் வாழ்க்கையே எனது செய்தி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தீபாவளியை யொட்டி இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களையும் பிரிட்டர் அரசு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்