கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்
கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.;
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தடுப்பூசி குறித்த கூடுதல் தகவல்களை தாக்கல் செய்யும் படி கேட்டு கொண்டதன் அடிப்படையில், பாரத் பயோடெக் நிறுவனம் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.