நாளை பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டி

நாளை பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டி

Update: 2021-09-19 10:28 GMT
நாளை பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டி

கனடாவில் நாளை நடைபெறும் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 பேர் போட்டியிடுகின்றனர்.கனடாவில்  பிரதமருக்கான பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ஆட்சியை கலைத்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுதேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.அதன்படி, நாளை நடைபெறும் பொதுத்தேர்தலில் 3வது முறையாக பிரதமர் பதவிக்கு லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ போட்டியிடுக்கிறார்.ஜஸ்டினை எதிர்த்து எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எரின் ஓ டூல் களமிறங்குகிறார்.இந்த பொதுத்தேர்தல் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 49 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.ஜஸ்டினின் லிபெரல் கட்சி சார்பில் 15 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 16 பேரும் களம் காண்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி, புதிய ஜனநாயக கட்சி சார்பில் 12 பேரும், கனடா மக்கள் கட்சி சார்பில் 6 இந்திய வம்சாவளியினரும் போட்டியிடுகின்றனர்.முன்னதாக 2019ம் ஆண்டு நடந்து முடிந்த பொதுதேர்தலில் கனடவாழ் இந்தியர்களான 20 பேர் போட்டியிட்டு எம்பி மற்றும் அமைச்சர்களாக வெற்றிப்பெற்றனர்.கனடா அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக ஹர்ஜித் எஸ்.சஜ்ஜன், சுகாதாரத்துறை அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த், இளைஞர் நலத்துறை அமைச்சராக பார்டிஷ் சாக்கர் உள்ளிட்ட4 பேர் முக்கிய அமைச்சர்களாக பதவி வகித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்