ஹெபத்துல்லா தலைமையில் புதிய அரசு?

தலிபான் தலைவர் ஹெபத்துல்லா அகுந்த்ஸாதா தலைமையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-09-02 06:28 GMT
தலிபான் தலைவர் ஹெபத்துல்லா அகுந்த்ஸாதா தலைமையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு புதிய அரசை அமைப்பதற்கான ஆலோசனைகளில் தலிபான் தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு, ஈரான் நாட்டின் அரசமைப்பை ஒத்திருக்கும் என கூறப்படுகிறது.தலிபான் தலைவர்களில் ஒருவரான ஹெபதுல்லா அகுந்த்ஸாதா, ஆப்கான் அரசின் உச்சபட்ச தலைவராக இருப்பார் என்றும், அவருக்கு கீழ், பிரதமர் அல்லது அதிபர் செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.இஸ்லாமிய மத அறிஞரான ஹெபதுல்லா அகுந்த்ஸாதா, தலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல் தலிபான்களின் நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கனி பராதர், ஆப்கானிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சராக இருப்பார் எனவும் தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசு நாளை பொறுப்பேற்கக்கூடும் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்