பள்ளி மாணவர்கள் கடத்தல் - ஆயுதமேந்திய கும்பல் அட்டூழியம்/

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சுமார் 150 பள்ளி மாணவர்களை ஆயுதமேந்திய கும்பல் கடத்திச் சென்று உள்ளது.;

Update: 2021-07-06 09:17 GMT
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சுமார் 150 பள்ளி மாணவர்களை ஆயுதமேந்திய கும்பல் கடத்திச் சென்று உள்ளது. கடுனா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் ஆயுதமேந்திய கும்பல் அத்துமீறி நுழைந்ததாகவும், துப்பாக்கி முனையில் அங்கிருந்த மாணவர்களை கடத்திச் சென்றதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிணையத் தொகைக்காக மாணவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், நைஜீரியாவில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மக்களை கவலையடையச் செய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்