இந்திய-இலங்கை கடற்படையின் கூட்டு பயிற்சி - திரிகோணமலை அருகே நாளை தொடக்கம்

இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே 'ஸ்லிநெக்ஸ்-20' என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

Update: 2020-10-18 16:37 GMT
இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கு இடையே 'ஸ்லிநெக்ஸ்-20' என்ற பெயரில் இருதரப்பு கூட்டு பயிற்சி இலங்கையின் திரிகோணமலைக்கு அப்பால், அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்எல்என் சயூரா என்ற ரோந்து கப்பலும், கஜபாகு என்ற பயிற்சி கப்பலும் பங்கேற்கவுள்ளன. இது தவிர, இந்திய போர்க் கப்பல்களில் இருக்கும் நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள், கடற்படையின் டோர்னியர் ரோந்து விமானம் ஆகியவையும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்