அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்,மைக் பென்ஸ் இடையே நேருக்குநேர் விவாதம்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அரசு கொண்டு வந்த வரிச்சலுகைகளை ஜோபிடன் பறித்துவிடுவார் என்ற மைக்பென்ஸின் வாதத்தை கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Update: 2020-10-08 07:31 GMT
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் பென்ஸ் இடையே நேருக்குநேர் விவாதம் நடைபெற்றது.  அதில், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி டிரம்ப் அரசு கொரோனாவை எதிர் கொண்டதால் 70 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். இதை மறுத்த மைக்பென்ஸ், அதிபர் டிரம்ப் அரசு எடுத்த தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறினார்.  மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனையில் ஐந்து நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் பென்ஸ் தெளிவுப்படுத்தினார். டிரம்ப் அரசின் மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளை ஜோ பிடன் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மைக் பென்ஸ், சிறந்த தொழிலதிபரான டிரம்ப், நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்திருப்பதாகவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால், வரிச்சலுகைகள் ரத்தாகும், வேலைவாய்ப்பு பறிபோகும் என அவர் குற்றம்சாட்டினார். ஆனால், ஜோ பிடன் ஒரு போதும் வரிகளை உயர்த்த மாட்டார் எனக் கூறிய கமலா ஹாரிஸ், மக்கள் நலனுக்கான முதலீடுகளை செய்வதே தங்களது பொருளாதார கொள்கை என விளக்கம் அளித்தார். 

துணை அதிபர் தேர்தல் போட்டியாளர்கள் பங்கேற்ற விவாதம் - அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பாராட்டு

இதனிடையே துணை அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் விவாதம்  தொடர்பாக பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், வாதங்களை முன்வைப்பதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிட​ன் தமது பதிவில், கமலா ஹரிஸ்,  அனைவரையும் பெருமைப்படுத்தியிருப்பதாக  தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்