"கொரோனா- உலகளாவிய தொற்று நோய்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனாவை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.;

Update: 2020-03-11 23:15 GMT
சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலி மற்றும் ஈரானில் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகள் ஒன்று  சேர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொரோனா வேகமாக பரவும் உலகளாவிய தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஈரானில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அங்கு கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்