பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..?பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள ஈரான் வலியுறுத்தல்

கொரோனா அச்சம் உலகம் முழுவதும் பயத்தை எற்படுத்தி உள்ள நிலையில், காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஈரான் தனது நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி உள்ளது.;

Update: 2020-03-09 18:33 GMT
கொரோனா அச்சம் உலகம் முழுவதும் பயத்தை எற்படுத்தி உள்ள நிலையில், காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஈரான், தனது நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஈரானில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் காகித பணம் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். வாகனங்களுக்கு எரிபொருள் நிரம்பும் போது, வாகனத்துக்குள்ளேயே இருக்கவும் ஈரான் வலியுறுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்