அமெரிக்க அதிபருடன் இந்தியா வரும் முக்கிய நபர்கள் யார் யார்? : மனைவி, மகள், மருமகனுடன் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இந்தியா வர உள்ள நிலையில், அவருடன் 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வருகைதர உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Update: 2020-02-22 21:12 GMT
அமெரிக்கா அதிபராக டிரம்பின், 2 நாள் பயணத்தில், குடும்பத்தினருடன் தாஜ்மகாலை பார்க்கச் சென்றாலும், வருகையின் நோக்கம் வர்த்தகமே என்கின்றனர் தொழில்துறையினர்.

அதிபருடன், அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா  ஆகியோரும் வருவதுடன், 12 பேர் கொண்ட குழுவினரும் இந்தியா வர உள்ளனர். டிரம்பின் மருமகனும்,  மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர்,
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் ஆகியோரும் உடன் வருகின்றனர். 

நிதித்துறை செயலர் ஸ்டீவ் முனிச், வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸ், பட்ஜெட் மற்றும் நிர்வாக அலுவலக இயக்குநர் மிக் முல்வானே ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கெனித் ஜஸ்டர், எரிசக்தித்துறை செயலர் புரூலைட்ஆகியோரும்,

வெள்ளை மாளிகை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர்,  வெள்ளை மாளிகை சமூகவலைதள இயக்குநர் டான் ஸ்காவினியோ, மெலினா ட்ரம்பின் ஆலோசகர் லிண்ட்சே ரெனால்டு உள்ளிட்டோரும் இந்தியா வருகை தர உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்