அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரீஸ் விலகல்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ், போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

Update: 2019-12-04 04:47 GMT
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ், போட்டியிலிருந்து விலகி உள்ளார். ஆரம்பத்தில் கமலாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, தற்போது சரியத் தொடங்கியதாகவும், நன்கொடைகளும் பெருமளவு குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாக கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்கி உள்ள அவர், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், தொடர்ந்து மக்களுக்காக போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்