கர்தார்பூர்: புனித பயணிகளிடம் கட்டணம் - பாகிஸ்தான் திட்டம்

கர்தார்பூர் செல்லும் புனித பயணிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-11-08 11:58 GMT
கர்தார்பூர் செல்லும் புனித பயணிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் நினைவிடம் பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட ஏராளமான புனித பயணிகள் பாகிஸ்தான் சென்று வரும் நிலையில், இந்த ஆண்டு புனித பயணிகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை கர்தார்பூர் சாலை திறக்கப்பட உள்ள நிலையில்,  புனித பயணிகளிடம் சுமார் ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்