இலங்கையில் 2 இஸ்லாமிய எம்.பி.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்​பு

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.

Update: 2019-08-24 21:36 GMT
இலங்கையில்  ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலையடுத்து அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகக் கோரி, அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம்  போராட்டத்தை தொடங்கினார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பல தரப்பில் இருந்தும்  இஸ்லாமியர் அமைச்சர்கள் மற்றும் ஆளுநருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர். இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன் நடந்த  பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்மையில் சில முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில்,  பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்பு கேபினட் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்