இலங்கையில் குண்டு வெடிப்பு : வதந்திகளால் அச்சமடைந்துள்ள மக்கள்

இலங்கையில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பும் நிலையில் வதந்திகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2019-05-16 20:51 GMT
இலங்கையில், கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் , இயல்பு நிலை திரும்பும் நிலையில், வதந்திகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். 200 பேர் வரை உயிரிழந்த, அந்த சம்பவத்துக்குப் பின்னர், தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் வதந்திகள் பரவி வருவதால் சில இடங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை தற்போது கட்டுக்குள் இருந்தாலும், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாடுவதாக பரவும் செய்திகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள நிலையில் நீர்கொழும்பு நகரில் அச்சநிலை காரணமாக கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்