உலக வங்கி தலைவர் கிம் பதவி விலகுகிறார்
உலக வங்கி தலைவர் கிம் யாங் கிம், வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.;
உலக வங்கி தலைவர் கிம் யாங் கிம், வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவால் இரண்டு முறை உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட கிம், இன்னும் மூன்று ஆண்டு பதவி காலம் எஞ்சியுள்ள நிலையில், பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் அகதிகள் குறித்த பல்வேறு பிரச்சினைகளில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம்மிற்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனது சொந்த விருப்பத்தால் கிம் பதவி விலகுவதாகவும், தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்களின் எழுச்சிக்காக அவர் பணியாற்றுவார் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.