ஜி- 20 மாநாடு : உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி- 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உலக தலைவர்களை சந்தித்தார்.

Update: 2018-12-01 16:10 GMT
அர்ஜென்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி- 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உலக தலைவர்களை சந்தித்தார். ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பெங், ஆகியோருடன் பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தியா - சீனா - ரஷியா ஆகிய 3 நாடுகள் 12 ஆண்டுகளுக்குப்பின் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாத ஒழிப்பு, நீடித்த வளர்ச்சி, கடல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றன. இதுதவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்