டிரம்பின் பிட்ஸ்பர்க் வருகைக்கு எதிர்ப்பு : யூத இனத்தை சேர்ந்த 11 பேர் கொலைக்கு கண்டனம்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தை பார்வையிட, அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2018-10-30 08:31 GMT
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தை பார்வையிட, அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அங்குள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் 11 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். யூதர்களை குறி வைத்து நடந்த இந்த இனவெறி தாக்குதலில் ராபர்ட் என்ற 46 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று சம்பவ இடத்தை பார்வையிட இருந்த அதிபர் டிரம்பிற்கு வரவேற்பு அளிக்க மாட்டோம் என்று  யூத தலைவர்கள் அறிவித்துள்ளதோடு, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, இனவெறி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்