அமெரிக்காவில் கார் விபத்து : 20 பேர் பலியான பரிதாபம்

அமெரிக்காவின் நியூயார்க் அருகே ஷோஹாரி நகரில் நிகழ்ந்த கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-10-08 10:39 GMT
அமெரிக்காவின் நியூயார்க் அருகே ஷோஹாரி நகரில் நிகழ்ந்த கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பெரிய அளவு கொண்ட லிமோ காரில், திருமண விருந்துக்காக 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்நிலையில், ஷோஹாரி அருகே சென்றபோது, கார் நிலைதடுமாறி, எதிரே வந்த வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் லிமோ காரில் பயணித்தவர்களில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக நியூயார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்