அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு தினம் இன்று...

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 17 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Update: 2018-09-11 05:30 GMT
* 2001ஆம் ஆண்டு இதே நாளில், 4 விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், அவற்றில் இரண்டை, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது மோத செய்தனர். 

* தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 

* இந்த பயங்கரவாத செயலுக்கு காரணம் அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் என உறுதி செய்த அமெரிக்கா,  பயங்கரவாதிகளை அழிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

* 10 ஆண்டுகள் தீவிர சோதனைக்கு பிறகு, ஒசாமா பின்லேடனை  அமெரிக்க ராணுவம் 2011 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது.  அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்