வட கொரியாவின் 70 வது ஆண்டு விழா

வடகொரியாவின் 70 வது ஆண்டு விழா, தலைநகர் பியோங்யாங்கில் கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது.

Update: 2018-09-10 04:15 GMT
மாபெரும் அலங்கார அணிவகுப்புகளை அதிபர் கிம் ஜாங் அன் தொடங்கி வைத்தார். வண்ண மயமான நடன காட்சிகளுடன் இரவில் அரங்கேறிய வானவேடிக்கைகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதில் தென் கொரியா மற்றும் வட கொரியா அதிபர்களின் வரலாற்று சந்திப்பை நினைவூட்டும் விதமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டன. வெளிநாடுகளின் உறவை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் விதமாக  நடனங்கள் அமைந்தன.
Tags:    

மேலும் செய்திகள்