இணையவழி நையாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை - சவுதி அரசு அதிரடி

இணைய வழி நையாண்டிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 56 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2018-09-05 20:41 GMT
இணைய வழி  நையாண்டிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 56 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சவுதி அரேபிய நாட்டின் புதிய மன்னராக
முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின், பேஸ்ஃபுக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, இணையதளம் வழியாக கேலி - கிண்டல் மற்றும் விமர்சனம் என்ற போர்வையில் நையாண்டி செய்து, தகவல்களை பரப்பும் செயலை, தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது. இந்த தகவலை, சவுதி அரேபிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்