பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2018-08-26 03:44 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பத்திரிகையாளர்களை லண்டனில் அவர் சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அடுத்த பிரதமரா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், தான் கொள்கைக்கான சித்தாந்த போரில் போராடிக் கொண்டிருப்பதாகவும் 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாற்றம் தனக்குள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆனால், அதுபற்றி பிரதமர் மோடி விவாதிக்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டினார். முத்தலாக் விவகாரத்தில் கிரிமினல் குற்றமாக்குவது மட்டுமே தங்கள் கட்சியின் பிரச்சினை எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என  ராகுல்காந்தி கூறியுள்ளார். லண்டனில், சர்வதேச திட்ட கல்வி கழகத்தில் உரையாற்றிய அவர், இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ராகுல்காந்தி, பாஜகவை வீழத்த, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கும்  எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நேரடி யுத்தம் நிலவுவதாக  குறிப்பிட்டார். பிரதமர் யார்? என்பதை தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்