இலங்கையில் பார்வையாளர்களை கவர்ந்த காற்றாடி திருவிழா
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 05:08 PM
இலங்கை தலைநகர் கொழும்பில், சர்வதேச காற்றாடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பல வண்ணம் மற்றும் பல வடிவ காற்றாடிகளை வானில் பறக்க விட்டனர். வண்ணமயமான இந்த பிரம்மாண்ட காற்றாடி திருவிழாவை, ஏராளமானோர் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.