ஒற்றைத் தந்தத்துடன் பார்க்க வித்தியாசமாக இருக்கும் கடல்வாழ் உயிரினம்
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 12:19 PM
* இவ்வுயிரின் பெயர்  narwhal அல்லது  narwhale என்பதாகும்.இதுவும் ஒருவகையான திமிங்கலமே.முன்பக்கம்  10 அடிக்கும் அதிகமாக நீண்டிருக்கும்  ஈட்டி போன்று நீண்டிருக்கும் ஒற்றை தந்தம் இவ்வுயிரினை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

* ஆர்டிக் பகுதியில் குறிப்பாக கிரீன்லாந்து,கனடா,ரஷ்யா பகுதிகளில் narwhale  கள்   வாழ்கின்றன.சாதாரணமாக 4 முதல் 5.5 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டுள்ளன.800 முதல் 1600 கிலோ எடைகொண்டுள்ளன.

* கடல்வாழ் சிறு உயிரினங்கள்,மீன்கள்,தட்டை மீன்கள் உள்ளிட்டவற்றை உண்கின்றன. கிட்டத்தட்ட 1500 மீட்டர் ஆழம் வரை சென்று வேட்டையாடும் வல்லமையை கொண்டுள்ளன.தட்டுதல்,விசில் அடித்தல் உள்ளிட்டவற்றால் சக  narwhal களுக்கு தகவல் அளிக்கின்றன
 
* 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன. இவை அவ்வப்போது மேற்பரப்பிற்கு வந்து,சுவாசித்து விட்டு உள்ளே செல்லும்.ஆர்டிக் பகுதி என்பதால் கடலின் மேற்பகுதி திடீர் திடீரென பனிக்கட்டியாக உறைந்துபோகும்.அதுபோன்ற சூழலில்,உள்ளேயே சிக்கிக்கொள்ளும்  சில Narwhal கள் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்துவிடுகின்றன.

* இறைச்சி மற்றும் தந்தங்களுக்காக அதிக அளவில்  மீனவர்களால் வேட்டையாடப்படுவதால், இவற்றின் எண்ணிக்கை உலக அளவில் 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது.இவற்றின் இறைச்சி அதிக சக்திவாய்ந்ததாகவும்,சுவை மிகுந்ததாகவும் உள்ளது.

 * எப்படி யானையின் தந்தம் விலைமதிப்பு மிக்கதாக இருக்கிறதோ அப்படி, Narwhal ன் தந்தமும் அதிக விலை போகக்கூடியது. இவற்றின் எலும்புகளில் கூட கலைநயமிக்க சிற்பங்களை செய்து விற்கிறார்கள்.வேகமாக அழிந்து வரும் பட்டியலில் இணைத்து இவற்றைக் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* இருந்தபோதிலும் கனடா,கிரீன்லாந்தில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன.அதோடு பனிக்கரடிகள்,வல்ரஸ்,சுறாக்கள் உள்ளிட்டவற்றாலும் வேட்டையாடப்படுகின்றன.