பாக். ராணுவ தளபதியை சித்து கட்டி பிடித்தது ஏற்புடையதல்ல - பஞ்சாப் முதலமைச்சர் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி பிடித்த சித்துவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-08-20 05:08 GMT
* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பதவியேற்பு விழாவில், காங்கிரசை சேர்ந்தவரான, பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து பங்கேற்றார். 

* இஸ்லாமாத் சென்றிருந்த சித்து, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, ​பஞ்சாப் மாநில பா.ஜ.க, சிரோண்மணி அகாலிதளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
* இந்நிலையில், சித்து செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், எல்லையில் இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் தளபதியை சித்து கட்டித் தழுவியது ஏற்புடையது அல்ல என கூறியுள்ளார். மேலும், சித்துவின் செயல்களை தான் ஆதரிக்கவில்லை எனவும் அமரிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்