பழமையும் பாரம்பரியமும் மாறாத சீன மாகாணம்

சீனாவில் இருக்கும் Fenghuang மாகாணம் பழமையும் பாரம்பரியமும் மாறாத, பகுதியாக இருக்கிறது.. உலக சுற்றுலா பயணிகளை, வெகுவாக கவர்ந்து வருகிறது.

Update: 2018-06-27 09:54 GMT
Ming  மற்றும் Qing மன்னர் கால பாரம்பரியம் இன்னமும் அப்பகுதியில் உயிர்ப்புடன் இருக்கிறது. குறிப்பாக இங்குள்ள கலாச்சாரம் மயோ கலாச்சாரம் என அழைக்கப்படுகிறது. அழகான மலைகள், நகருக்குள் பாய்ந்தோடும் நதிகள், நதிகளின் மீது தவளும் பண்டையகால படகுகள் என  பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது Fenghuang மாகாணம். ஆறுகள் ஏரிகளிலேயே கட்டப்பட்டுள்ள கலைநயமிக்க கட்டடங்கள் நம் கண்களை கவரும். கற்களால் உருவாக்கப்பட்ட சாலைகள், மரங்களால் உருவான வீடுகள் இப்பகுதியில் நிறைந்திருக்கிறது. மக்கள் கூட பாரம்பரிய உடைகளை தான் பெரும்பாலும் அணிந்திருக்கிறார்கள்.கடந்த 2008 ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய நினைவு சின்ன பட்டியலில் இப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது.1700 களில்  கட்டமைக்கப்பட்ட இந்த மாகாணம்,  300 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் இன்னும் பழமை மாறாமல் காட்சியளிப்பது சீனர்களின் கலைத்திறனையும், பாரம்பரியம் பண்பாட்டின் மீது அவர்களுக்குள்ள ஈடுபாட்டையும் காட்டுகிறது.சுற்றுலா பயணிகளின் சொர்க பூமியாக இருக்கும் இந்த இப்பகுதியில், படகுகளில் பயணித்து மகிழலாம்.பாரம்பரிய வீடுகளுக்குள் சென்று சுற்றிப்பார்க்கலாம்.அவ்வப்போது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இங்கே அரங்கேற்றப்படுகினற்ன.

Tags:    

மேலும் செய்திகள்