கவுதமாலா எரிமலை வெடிப்பு - பலி எண்ணிக்கை 109 ஆக உயர்வு, 200க்கும் மேற்பட்டோர் மாயம்
கவுதமாலா நாட்டில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.;
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இதனால் பல கிராமங்கள் மற்றும் வீடுகள் சாம்பலால் மூடப்பட்டன.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச்சென்றனர். இந்த விபத்தில் இதுரை 109 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சுவாசகோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.