"யூடியூபர் பெலிக்ஸ்க்கு அடுத்த ஒருநாள்" - போலீசுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து வழிஅனுப்பிய நீதிமன்றம்

Update: 2024-05-24 02:10 GMT

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது....

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் இரண்டாவது நபராக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திருச்சியில் இருந்து அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு விசாரணைக்காக கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மனுவை விசாரித்த நீதிமன்றம், பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்ததோடு, நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது....

Tags:    

மேலும் செய்திகள்