20 மாணவர்களுக்கு நேர்ந்த கதி.அரசு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுத்த தனியார் ஹாஸ்பிட்டல்?
பவானி அருகே, விஷத்தன்மை கொண்ட காய்களை பறித்து சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..ஈரோடு மாவட்டம் நத்தமேடு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், உணவு இடைவேளை நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மரத்தில் இருந்த காய்களை பறித்து சாப்பிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டத்தை அடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் மேல்சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு மாற்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக கூறி, மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.