எரிமலைக்கு அருகே நின்றது போல வெப்பநிலை.. இந்தியாவையே கதிகலங்கவிட்ட 127 டிகிரி..?

Update: 2024-05-30 03:07 GMT

சென்சாரில் ஏற்பட்ட பிழையால் டெல்லியில் 52 புள்ளி 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லி முங்கேஷ்பூரில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு வாய்ப்பில்லை எனவும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கிரண் ரிஜிஜு குறிப்பிட்டிருந்தார். டெல்லியில் அதிகபட்சமாக 45.2 முதல் 49 செல்சியஸ் வரை மட்டுமே வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்