இந்த 11 மாவட்டங்கள்..அடுத்த 2 நாட்கள்..மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் | Tamilnadu
தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நாளையும் (நவ.29) , நாளை மறுநாளும் (நவ.30) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,
புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் Card-8 ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் நாளை (நவ.29) கரை திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.