இயக்குநர் பாலா குறித்து பிரபல நடிகை உடைத்த ரகசியம்.. அதிர்ச்சி தகவல்

Update: 2024-02-29 03:29 GMT

வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக, பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து தயாரிக்க, பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வந்தது. இந்தநிலையில், அப்படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ, படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா தன்னை அடித்தாக, நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இதனையடுத்து பாலாவை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். வணங்கான் படத்திலிருந்து சூர்யா திடீரென விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அருண் விஜயோடு அப்படம் மீண்டும் உருவானது. ஆனால் அதில், மமிதா பைஜூ நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்