பாட்டியை தூக்கி போட்டு கொன்ற கொடூர பேரன்

Update: 2023-09-29 12:18 GMT

ராமநாதபுரம் அருகே செலவுக்கு பணம் தராத பாட்டியை, மதுபோதையில் டிவியை தூக்கிப்போட்டு கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.இராமநாதபுரம் கீழக்கரை அண்ணாநகரைச் சேர்ந்த மாரியம்மாள், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் வீட்டின் அருகே வசித்து வந்த அவரது பேரன் லட்சுமணன், செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியிடம் அடிக்கடி தகராறு செய்வார் என கூறப்படுகிறது. நேற்று இரவு மதுபோதையில் இருந்த லட்சுமணன், வழக்கம் போல் செலவுக்கு பணம் கேட்டு பாட்டியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பணம் தர மூதாட்டி மறுத்ததையடுத்து, டிவியை தூக்கி போட்டு தனது பாட்டியை கொன்று லட்சுமணன் தப்பியுள்ளார். கொலை குறித்து வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த லட்சுமணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்